யாரடி நீ பெண்ணே. .??
Posted: Tuesday, 16 October 2012 by துருவன் in Labels: கடற்கரையில் சில கோலங்கள். .
0
நாணம்
அவள்
முகத்துக்கான ஆடை. .
காமம்
அற்ற நட்பை
கொடையென
கொணர்ந்தவள். .
பேய்கள் சில
உலவும் பாரினில்
பெண்ணென
பிறப்பெடுத்த வரம்
அவள். .
காதல்
அரும்பும் கணங்களிலும்
கபடமற்ற
அன்பை
இதயத்தில் விதைப்பவள். .
வறண்ட பாலையிலும்
வற்றாத தென்றல்
அவள் என்பேன். .
அழும்போதெல்லாம்
அன்னையின் மடிக்கு
அடுத்து
அவளின்
அரவணைப்பு அழகென்பேன். .
எதிர்பார்ப்புகள் இல்லாமல்
ஏமாற்றங்கள் தராமல்
இதழோரம் எப்போதும்
புன்னகையை பொதிப்பவள். .
நானாக நானிருக்க
நடிப்புகள் அற்ற
நட்பை
வெளிக் கொணர்ந்தவள். .
ஆகக்
கடைசியில். .
ஆயிரம் பெண்கள்
இனி எனக்கமைந்தாலும்
என் தோழி
உனை யாரும்
தொட்டு வீழ்ந்த இயலாதடி. .
அவள்
முகத்துக்கான ஆடை. .
காமம்
அற்ற நட்பை
கொடையென
கொணர்ந்தவள். .
பேய்கள் சில
உலவும் பாரினில்
பெண்ணென
பிறப்பெடுத்த வரம்
அவள். .
காதல்
அரும்பும் கணங்களிலும்
கபடமற்ற
அன்பை
இதயத்தில் விதைப்பவள். .
வறண்ட பாலையிலும்
வற்றாத தென்றல்
அவள் என்பேன். .
அழும்போதெல்லாம்
அன்னையின் மடிக்கு
அடுத்து
அவளின்
அரவணைப்பு அழகென்பேன். .
எதிர்பார்ப்புகள் இல்லாமல்
ஏமாற்றங்கள் தராமல்
இதழோரம் எப்போதும்
புன்னகையை பொதிப்பவள். .
நானாக நானிருக்க
நடிப்புகள் அற்ற
நட்பை
வெளிக் கொணர்ந்தவள். .
ஆகக்
கடைசியில். .
ஆயிரம் பெண்கள்
இனி எனக்கமைந்தாலும்
என் தோழி
உனை யாரும்
தொட்டு வீழ்ந்த இயலாதடி. .