எது சுதந்திரம். .?

Posted: Saturday 8 September 2012 by துருவன் in Labels:
0

அடிமைத்தனம் எனும் தளையிலிருந்து விடுபட்டு காலணியாதிக்கம் எனும் ஆண்டைத்தனம் முடிவுற்று சுயாட்சி எனும் நிலை கொணர்ந்ததே சுதந்திரம். .
தன்னலமற்ற தலைவர்கள் பலர் தம் இன்னுயிரை நீத்து பெற்றது இந்த சுதந்திரம். .
ஆம் தோழர்களே. .
அகிம்சையை பற்றிக் கொண்ட அண்ணல் காந்தியும் சரி, ஆயுதம் தரித்த நேதாஜியும் சரி போராடி பெற்றது சுதந்திரம் தான். .
எழுச்சி கவிகள் ஏட்டில் வடித்தனர்,எழுதி எழுதி மாண்டுபோயினர். .
மூதாதையர்கள் மூச்சறுத்து பெற்றுவிட்டோம் சுதந்திர சாசனத்தை. .

எம் நாடு விடுதலை அடைந்ததென ஆடுங்கள் பள்ளு பாடுங்கள். .
விடுதலை வீரர்களுக்கு நன்றி செலுத்துங்கள். .

ஆனால். . . . .
எது சுதந்திரம். . .?
ஏதோ ஒரு பிடியிலிருந்து விடுபடுவதும் சுதந்திரம்தான். . . . .
பெண்ணொருத்தி பொன்நகைகளோடு நள்ளிரவிலே நடைபோவாளாயின் அது சுதந்திரம் என் உரைத்த அண்ணல், தனி மனிதனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழிப்போம் என சூளுரைத்த எம் முண்டாசு கவியாகட்டும் சுதந்திரம் என்பது ஒவ்வொன்றிலும் உண்டு. .
சுயமரியாதையோடு வாழ்வதும் சுதந்திரமே. .

பசிக்கொடுமையிலிருத்து விடுபட்டு தன்னிறைவு அடைவதும் சுதந்திரமே . .
மக்களை மாளச்செய்யும் தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு அமைதி காப்பதும் சுதந்திரமே. .
நாடு நமக்களித்த அடிப்படை உரிமைகளை உபயோகித்தலும் சுதந்திரமே. . .


அரசியல் மாறும். .
காலணியாதிக்கம் பற்றி படித்துப் பாருங்கள். .
சுதந்திர காற்றை சுவாசிக்க பிடிக்கும். .
தனி மனித சுதந்திரத்தை யாசிக்கும் உங்களுக்கு ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் நேசிக்க தெரியவேண்டும். .
இந்த சுதந்திரம் பல உயிர்களின் இழப்பின் மீது நாம் மெத்தையிட்டு உறங்குவது. .
அந்த தியாகிகளுக்கு எம் நன்றிகளும் வணக்கங்களும். .
எம் தாய் மண்ணுக்கு வணக்கம். .
வந்தே மாதரம். .

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips