கூடங்குளமும் அப்துல் கலாமும். .
Posted: Saturday, 8 September 2012 by துருவன் in Labels: கோமாளியின் கோணம் - அவதானிப்புகள்
0
கூடங்குளம் அடுத்த 10ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய அணுமின் உற்பத்தி நிலையமாக அடையாளம் காட்டப்படும். .
-அப்துல் கலாம். .
அணுமின்,அணுஉலைகளை கையாண்டுகொண்டிருக்கும்,மேம்பட்ட தொழிட்நுட்பங்களை கொண்டிருக்கும் மேலைநாடுகளே அவற்றை கைவிட எத்தனிக்கும் கனத்தில் அவசர கோலத்தில் ஆர்வ கோளாறில் கையிலெடுக்க நினைக்கும் இந்நிய தேசியத்தை என்னவென சொல்வது. .
வளரும் நாடுகளுக்கு வல்லரசாக வேண்டுமென்ற ஆவல் நிச்சயம். .
இந்தியா வரும் காலங்களில் உலகின் பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்ற கணிப்புகளும் சரிதான்.
ஆனால்,சரியான வரைமுறைகளும்,பாதுகாப்பு அம்சங்களும் இன்றி இந்த அணுஉலையை அமைப்பது கொடுமையே. .
அணுமின்சாரம் வரும்காலங்களில் விஞ்ஞான கலாச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் என்பது நிதர்சனம். .ஆயினும் சரியான கையாளும் திறன் இல்லாத விஷயத்தில் மூக்கை நுழைப்பது தவறு. .
அணுமின்சாரத்தை சாராமல் இந்தியாவின்,தமிழகத்தின் மின்தேவையை பூர்த்தி செய்ய நிலை இருக்கும்போது அணுஉலையை பற்றி நிற்பது தேவையில்லாத வீம்பு. .
அணுஉலை செயல்பாடுகளை கண்காணிக்கவும்,அதற்கு தேவையான தொழிட்நுட்பங்களும் இருப்பினும் அடிப்படை விதிகளான சுற்றுச்சூழல் நிலைகளை கூடங்குளம் மீறியுள்ளது. .
RISK FACTOR எனப்படும் விஷயங்களில் மெத்தனம் காட்டப்படுபோது பின்விளைவுகள் கோரமாக நிகழ்வது நிச்சயம். .
போபால் விஷவாயு வேதனைகளை கண்டபின்னும் அதைவிட கோரமான ஒன்றை செய்வது அசட்டுத் துணிச்சல் தான். .
கதிர்வீச்சில் ஆராய்ச்சி செய்து அதன் விளைவுகளை அறிந்து நோபல் பரிசு பெற்று பின் அதனை வெறுத்த மேரி கியூரி பற்றி அப்துல் கலாமுக்கு தெரியாதா . .?
என்னசெய்தாவது நலம் பயக்கவேண்டும் என்பது நல்ல அரசுக்கு அழகல்ல. .
மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு எதிராக இருப்பது என்ன நியதி. .?
வாக்களித்தவன் தவறா. .?
வந்து வாய்த்தவன் தவறா. .?
கூடங்குளம் செயல்பட போவது அரசுக்கு கிடைத்த வெற்றி அல்ல. .
வழியில் போற ஓணான பிடிச்சு மடியில விட்டுகொண்ட கதையே. .