0
அதுல் குல்கர்னியின் மழுங்க ஷேவ் செய்த முகத்தை டெரர் லுக் கொடுக்க வைத்து குளோசப் ஷாட்டிலேயே எடுத்துத் தள்ளி போஸ்டர் அடிச்சு ஏமாத்திட்டாய்களே. .
அதுல் குல்கர்னி. .
'ரன்' னில் சென்சுரி ஸ்கோர் செய்த மனுஷன அதிகம் விளையாட விடாம ஆக்கி இங்க ஹாப் சென்சுரி தான் அடிக்கவிட்டாய்ங்கே. .
warning : spoilers. .
சாதாரண பின்புலம் கொண்ட,நண்பர்கள் வட்டாரம் கொண்டு வாழும் கல்லூரி மாணவன் தன் நண்பனின் மருத்துவ செலவுக்காக அசாதாரணமான ஒரு பகடைக் காயாய் ஆபத்தான விளையாட்டில் சிக்கி வெளியேறுவது தான் திரைக்கதை. .
திரைக்கதைக்கு ஒரே ஒரு கிளாப். . ஹாலிவுட் ரேஞ்சுக்கு யோசிச்சு எழுதியதற்காக. .
ஆனா அதை இரசிக்கும் விதமான படமாக எடுக்காமல் விட்டதற்காக ஒரு பெரிய குட்டு. .
பெரும்பாலும் புதுமுகங்கள். . குழப்பமாக அதே சமயம் வெயிட்டாக காமிக்கவேண்டிய கதாபாத்திரத்தில் பிரதாப் போத்தன். .
அசராமல் நடித்திருக்கிறார். .ஒரே ஒரு சீனில் மட்டுமே வர கிராமத்து அப்பா
நிழல்கள் இரவி என உபயோகத்திருந்தாலும் SCREEN FILLUPs பெரியாளாக இருந்தால் படத்திற்கு பப்ளிசிட்டி வரும் என போட்டிருப்பார்கள் என தோன்றச் செய்வதால் ஏற்க மறுக்கிறது. .
ரஷ்யன் அண்டர்கிரவுண்ட் குரூப்,தீவிரவாதம்,மிலிட்டரி என ஆரம்பிக்கும்போதே அடப்பாவிகளா போடவைக்கும் எல்லா நேரங்களிலும் அதுல் குல்கர்னியின் மர்மமான போலீஸ் கேரக்டரைசேசன் அவற்றை மறக்கவைக்கிறது. .
முதல் பாதி முழுக்க நண்பர்களுடன் சேட்டை.. பிற்பாதியில் திரில்லர் என கோடு பிரித்தது பாராட்டலாம். .
கல்லூரியில் படித்துக் கொண்டே பார்ட் டைம் ஜாப் ஆக எலெக்டிரீசியன் வேலை பார்க்கிறார் கதாநாயகன். .வேலை செய்ய போகும் இடத்தில் விசித்திரமாகவே உரையாடல்கள் நடக்கிறது. .பணம் வரும்,வரும் என புலம்பும் போத்தன் போதை மருந்து அடிமையாக உலவுகிறார். .
தன் வீட்டிற்கு நண்பர்களை அழைத்துச் சென்று கொண்டாடிவிட்டு திரும்பும் வழியில் நண்பனும்,அவன் காதலியும் விபத்தில் சிக்குகின்றனர். .தோழி மரணமடைய தோழனுக்கு ஆப்ரேஷன் செய்ய பணம் தேவைபடுகிறது.. அப்போது வேலை செய்ய போகும் வீட்டில் பிரதாப்க்கு ஒரு லெட்டர் வர சந்தோஷத்தில் அதிகமாக போதை மருந்து உட்கொண்டு மரணமடைகிறார் போத்தன். .
நண்பனின் ஆப்ரேஷனுக்கும் பணம் தேவை என்பதால் எதுவும் தெரியாவிட்டாலும் அந்த லெட்டரை எடுத்துக்கொண்டு பயணப்படுகிறார் ஹீரோ. .
முதல் பாதியில் ஆங்காங்கே அதுல் குல்கர்ணியும் அவரது போலீஸ் ஒருவரும் பிரதாப் வீட்டை நோட்டம் பாரத்துக்கொண்டே இருக்கின்றனர். .
சம்பந்தமே இல்லாமல் எலெக்டிரீசியன் வேலை பார்க்கப் போகும் ஹீரோவையும் சந்தேகத்தோடு ஆராய்வது ஈர்க்க மறுப்பதோடு பிற்பாதியை பற்றி குழப்பிவிடுகிறது. .
பாண்டியில் இருந்து
அந்த லெட்டரை கொண்டு கொச்சிக்கு பயணப்படும் ஹீரோ இரகசியமாகவே ஒரு கப்பலுக்கு கொண்டு செல்லப் படுகிறான். .
தான் தான் அந்த லெட்டரில் இருக்கும் (DANIEL MATHEWS)பிரதாப் என பொய்யுரைக்கிறான். .
அங்கு தான் டுவிஸ்ட். .
பகடைக் காயாக ஆட்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு போட்டியில் கலந்துகொ(ல்)ள்ள வைக்கிறார்கள். .அவர்கள் மீது பணக்காரர்கள்,டான் கள் பந்தயம் கட்டுகிறார்கள். .
சுவாரஸ்யமான சீன்கள் என்பினும் பிண்ணனி இசை நெருடிவிட்டு அதை மறக்க வைக்கிறது. .
கடைசியில் ஹீரோ ஜெயிக்கிறார். .லக் தான். . பணத்தோடு திரும்புகையில் ஹீரோவால் போட்டியில் கொல்லப்பட்ட ஒருவனின் தம்பி ஹீரோவை துரத்தி(அடிச்சு போட்டாலும் ஹீரோவை பின்தொடர்ந்தானாம்?!)
நண்பன் ஆபரேஷனுக்கு பணம் எடுத்து திரும்புகையில் கிளைமாக்ஸ். .
அங்க ஒரு டிவிஸ்ட். .
எதிர்பார்க்காத டிவிஸ்ட்..
..
plus :
ஒரே சின்ன ஃபிரேமில் சில விஷயங்களை நாமாகவே புரிந்துகொள்ள வைத்தது. .
அதுல் குல்கர்னியின் நடிப்பு. .
சில இடங்களில் இசை. .
கிளைமாக்ஸ். .
ஹாலிவுட் கதைக்கு(copycatஆக இல்லாமல் இருந்தால் நலம். .)
இரு நண்பர்களின் சேட்டைகள். . (முக்கியமாக டீ வாங்கும் இடம். .)
MINUS :
ஹீரோ பகடைக் காயாய் ஆவதற்கு
வலுவான காரணங்கள் வேண்டும் என்பதற்காகவே சூதாட்டத்தில் சொத்தை இழந்த அழுதுபுலம்பும் ஒரு அரசகுடும்பம்,தோழியின் மரணம் என நீட்டி முழக்கி இருப்பது பெரிய மைனஸ். .
ஹாலிவுட் ஸ்டைலில் UNDERGROUND கேம்ஸ் யோசித்து அதை சரியாக காட்சிப் படுத்த இயலாதமைக்கு. .
பின்னணி இசை சம்பந்தமே இல்லாமல் பாடல்கள். .பாதியிலேயே பாதி தியேட்டர் காலியான கொடுமை. .
CONTINUITY,தெளிவு இல்லாத பல இடங்கள். .
முக்கியமாக ஹீரோ. .
..
Bottomline :
அதுல் குல்கர்னி காகவே படம் ஓடும் எனும் ரீதியில் கதை பிண்ணியது தவறு. .
my rating : 5/10. .