the dark knight rises

Posted: Saturday, 8 September 2012 by துருவன் in Labels:
0

END OF AN EPIC. .

சினிமா இரசிகர்கள் எல்லோரும் ஆவலோடு காத்திருந்த,காமிக் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்த படம் இந்த THE DARK KNIGHT RISES. .

80-90'களிலேயே சில பேட்மேன் படங்கள் வந்திருந்தாலும் திரைக்கதையின் தளபதி CHRISTOPHER NOLAN இயக்கத்தில் வெளியான BATMAN சீரிஸ்கள் பெரும் வரவேற்பை பெற்றன. .
அந்தவரிசையில்(BATMAN BEGINS,DARK KNIGHT) பல ஆண்டுகள் கழித்து வெளிவந்திருக்கும் மூன்றாம் பாகம் தான் இந்த THE DARK KNIGHT RISES. .
தெளிவான திரைக்கதை கிடைக்கும் வரை அடுத்த பாகத்தை எடுக்கப் போவதில்லை என கங்கணம் கட்டிகொண்டு உழைத்த NOLAN கடைசியில் படம் எடுத்து விட்டார். .வசூலில் வாரிக் குவித்துக்கொண்டிருக்கும் படம் பற்றிய அலசல். .

WARNING : SPOILERS. .

காமிக் கதைகளில் ஆர்வம் கொண்ட என் போன்ற இரசிகர்களுக்கு BATMAN பற்றி முன்னமே தெரிந்திருக்கும். .
காமிக் என்பதால் தொடர்கதை போல் நீட்டி முழக்கலாம். .
தெளிவான கதையம்சம் கொண்டு வெளியிடலாம். . அப்படி ஒரு SUPER HERO தான் இந்த BATMAN. .

BATMAN பற்றி ஒரு சின்ன அறிமுகம். .
1.எல்லா சூப்பர் ஹீரோ போல பேட்மேன் கிடையாது. .ஏனெனில் இயற்கையாகவே எந்த சக்தியும் கிடையாது. .
தானாகவே தன் தாய்நகரத்தை காக்க விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மூலம் வேடம் தரித்த மாவீரன் தான் இந்த BATMAN. .
2.இரவில் GOTHAM நகரத்தை காவல் காக்கும் இந்த வீரன் வெளியுலகில் ஒரு BRUCE WAYNE எனப்படும் மாபெரும் தொழிலதிபர். .
3.பணம் செலவழித்து தன் நண்பர் LUCIOUS FOX என்பவரின் உதவியில் தன் SUPERHERO உடையினை ,வாகனத்தை தயாரித்து போராடுபவர். .
4.எப்படியும் ஒரு வில்லன் GOTHAM நகரை கைப்பற்ற துடிக்கும் போது துவளாமல் போராடி வீழ்த்தி நகரத்தை காப்பவர். .

நிற்க. .


முக்கியமாக,பேட்மேன் ஒரு சாதாரண மனிதன் என்பதால் காமிக்ஸிலும் சரி,படத்திலும் சரி, மனித உணர்வுகள் கொண்டே BATMAN கதாபாத்திரம் படைக்கப் பட்டிருக்கும். .ஆக்க்ஷன்
மட்டுமே வராமல் சாதாரண சூழ்நிலைகளும் வருவதால் எளிதில் நம்மை ஈர்க்கும் திறமை BATMANக்கு உண்டு. .

THE DARK KNIGHT RISES :
இப்படத்திற்கு முந்தைய இரண்டு படங்களை பார்த்தால் மட்டுமே ஓரளவு இப்படம் புரியும்..
ஆயினும் திரைக்கதைகளின் தளபதி NOLAN இந்த படத்தில் சற்றே சொதப்பியிருப்பது வருத்தம். .தலைமறைவாய் வாழும் பேட்மேன் GOTHAM நகரை கைப்பற்றும் BANE எனும் வில்லனை போராடி வீழ்த்த வெளிப்படும் கதையில் வரும் திரைக்கதையே படம். .
நிச்சயம் பார்க்க வேண்டிய படம் என்பதால் +&- மட்டும் தருகிறேன். .

PLUSES :
1.திரைக்கதை. . NOLANன் மேஜிக். .
BATMANன் வாழ்க்கையை முடித்துவைக்கும் விதம்.. அவரின் மனதில் உறுத்திக் கொண்டிருக்கும் சில விஷயங்களுக்கு தீர்வு அளித்த விதம். .
2.HANS ZIMMMERன் பிண்ணனி இசை. .
பட்டைய கிளப்பும் தீம். .
3.SUSPENSION OF DISBELIEF எனப்படம் நம்பமுடியாத விஷயங்களை திரையில் காட்டும்போது நம்பவைப்பது. .அது NOLANக்கு கைவந்த கலை. .
4.VISUAL EFFECTS. .

MINUS :
1.முடிவுரை. .BATMAN இரசிகர்களுக்கு பெரிய இடியாய் விழுந்தது இது. .BATMANனின் தியாகம் அளப்பரியது என விளங்கவைத்துவிட்டு மீண்டும் அவர் உயிருடன் இருக்கிறார் என காட்டியிருப்பது. .
2.CATWOMAN ஆக வந்த பாத்திரம். .துருப்புச் சீட்டாக பயன்படுத்த அமைக்கப் பட்ட பாத்திரம் என்றாலும் திரையில் ஒரு பாதியை எப்போதும் நிறைத்து நின்று கொண்டு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. .
3.BANE. .டுவிஸ்ட் வைத்து BANEன் வரலாற்றை சொன்ன போது ஏதோ ஒன்று BANE மீதான பயத்தை குறைத்துவிடுகிறது. .
காமிக்ஸில் படு சூடான கதாபாத்திரமாக தெரிந்த,படுபலமான,அறிவாளியான BANE இப்படத்தில் குரலால் மட்டுமே அநாயசமாக பயம் காட்ட எத்தனிப்பது வேதனை. .ஆயினும் நகரத்தை கைப்பற்ற எடுக்கும் காட்சிகள் சூப்பர் எஃபெக்ட்ஸ். .
4.MISS TATE : முற்றிலுமாக BANEன் பாத்திரத்தை செயலிழக்கச் செய்யும் புதிருக்கு விடை சொல்ல வந்த சொதப்பல். .
5.BLAKE /ROBIN : REBOOT செய்தாலே யாராலும் தாங்க முடியாத,NOLANன் மூன்று படங்களை சீரழித்துவிடும் இந்த வரிசையில் அடுத்த பாகத்திற்கான சிறு குறிப்புகளாய் அமைந்த கதாபாத்திரம் சற்றே கடுப்பேற்றுகிறது. .
ஆயினும் BLAKE தான் ROBIN என தெரியும் வரை சூடு குறையாமல் சென்றது NOLANன் கைங்கர்யம். .
6.வழக்கமான பாணியில் NUCLEAR REACTOR,TIME BOMB என கொண்டு சென்று,ஹீரோ தன்னகத்தே எடுத்து நகரத்துக்கு அப்பால் சென்று அழிக்கிறார் என்பதெல்லாம் TEMPLATE காட்சிகள். .
..

ஆழமான கதாபாத்திர தோரணைகள் கொண்ட ALFRED,COMMISNOR GORDON ஏமாற்றாமல் மிக அருமையான காட்சிகள். .
அடுத்த பேட்மேன் ROBIN தான் என்பதையும்,வழக்கம் போல FOX அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்வார் என்பதும் ஏற்க முடியாத வேதனை. .ஆயினும் ஹாலிவுட்டில் இதெல்லாம் சகஜமப்பா. .
யானைக்கும் அடி சருக்கும். . NOLANக்கு இது சிறு சறுக்கல் என்று மறுக்காமல் கூறலாம். .பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று. .
MY RATING 8.5/10. .

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips