எது சுதந்திரம் -2

Posted: Saturday 8 September 2012 by துருவன் in Labels:
0

65வது ஆண்டா 66வது ஆண்டா என மத்திய அரசு துறைகளே குழம்பிக்கொண்டு ஊடகங்களில் விளம்பரம் இட்டு சுதந்திரத்தின் பெருமையை போற்றுகின்றனரோ. .?
(காண்க : 15.08.2012 THE HINDHU)

என் கேள்வி என்னவெனில்,
ஈன்றெடுத்த சுதந்திரத்தை நாம் முறையாக அனுபவிக்கின்றோமா. . ?

அடிமைத்தளை உடைத்தால் மட்டும் அஃது
சுதந்திரம் எனப்படும். .
அஃதென்றால் அடிமைத்தளை என்பதன் அளவுகோல்
செம்மையாக சொல்லப்படவேண்டும். .
ஆங்கிலேய ஆட்சியை
முடித்தோம் என்பது மட்டும் உங்கள் வாதமாக இருப்பின் அது பொருள் பொதிந்த வாதம் அல்ல என நான் கருதுகிறேன். .
யாரேனும் ஒருவர் மாறி மாறி ஆண்டுகொண்டுதான் வந்தனர். .அது வேறு நாட்டான் என்பதால் கோபம் பொங்கி எழுந்து,எம்மை ஆள்வதற்கு பரதேச மக்கள் தேவையில்லை என சுதந்திரம் தேடி,பாடி,போராடி கடைசியில் பெற்றும் விட்டாயிற்று. .
சுதந்திரம் என்ற வார்த்தையை நான் கொச்சை என சொல்லவில்லை. .
ஆங்கிலேயனின் அடிமைதளையை உடைத்தோம் என்பது மட்டும் நமக்கு உவகை தரக்கூடியதல்ல. . அதுவும் அறுபதுக்கும் மேலான ஆண்டுகள் ஆனபின்னும் அதை நினைத்து நாம் முன்னேறிவிட்டோம்,தன்னிறைவு அடைந்துவிட்டோம் என்று நினைப்பதுதான் மடமை. .

வீழ்வது யாராயினும் ஆள்வது நாமே என மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு ஜனநாயகம் என்பதின் உயிர்நாடியான தேர்தலை சாக்கடையாய் மாற்றிவிட்ட ஆட்சியாளர்களிடம் இருந்து எப்போது சுதந்திரம் வேண்டப் போகிறீர்கள். .?

சுதந்திர,சனநாயக மாநிலங்களின் கூட்டமைப்பு இந்தியா என சட்டவடிவு இருப்பினும் சாதி அடிப்படையில்,மதம் அடிப்படையில்,வழிபடு தெய்வங்கள் அடிப்படையில்,கட்சி அடிப்படையில் பிரிவு பட்டு இந்திய மாநிலங்களை அழிக்கும் சுயநல அரசியல்வாதிகளிடமிருந்தும்,அந்த அரசியல் கட்சிகளிடமிருந்தும் சுதந்திரம் எப்போது. .?

வல்லரசு என்ற கானல் நீரை தேடி அலைந்து தன்னிறைவு என்ற வார்த்தையை மறந்துபோன அடிமட்ட பொருளாதார அமைப்பை மறக்கவைத்த போதையிலிருந்து சுதந்திரம் எப்போது. .?

இரயிலோடு எரித்து கொலை செய்ய வைத்த,கோவில் கட்டும் பிரச்சினையில் கொலைகளத்தை உண்டாக்கிதந்த அருவமான கடவுளின் மதங்களின் பிடியிலிருந்து சுதந்திரம் எப்போது. .?

உரிமைகள் எனப்படும் போர்வை போராட்டங்களில் கலவரங்கள் கொண்டு மனிதநேயம் கொய்து பரமகுடியோ,பாப்பாநாயக்கன்பட்டியோ, விடாமல் துரத்தும் சாதிப்பேய்களிடம் இருந்து சுதந்திரம் எப்போது. .?

பணம் இருந்தால் மனிதனும் தெய்வமாகலாம் என்ற பணக்கார அதிகார வெறியர்களிடமிருந்து சுதந்திரம் எப்போது. .?

நூறாவது சுதந்திர நாளை கொண்டாட நாம் இருப்போமா என்பதையே கேள்விக்குறி ஆக்கும்
தட்பவெப்ப நிலை,மனிதனால் உந்தப்பட்டு ஏற்படும் இயற்கையின் பேரழிவுகளிடமிருந்து சுதந்திரம் எப்போது. .?

...
முதலில் சுயநல அடிமைத்தனதிலிருந்து உங்களை வெளிக்கொணர முயலுங்கள். .
..
சுயநலம் கருதாமல் போராடிய வீரர்களுக்கு அர்பணம் மட்டுமே இந்த நாள். .
தியாகிகள் தினம் என்பது பின் எதற்கு. .?
காந்தியை மட்டுமே முன்னெடுத்து சொல்லப் படும் சுதந்திர கதைகளை தவிர்த்து பின்னோக்கி பாருங்கள். .
கண்டிப்பாக,ஈன்ற சுதந்திரத்தை எப்படி அனுபவிப்பது என்ற தெளிவுரை கிடைக்கும். .
..
போராடிய வீரர்களை நான் கொச்சை படுத்த முயலவில்லை. .
வாழ்க்கைக் காகதான் இந்த சுதந்திரத்தை பெற துடித்தனர். .
வழிவந்த நாமோ அதை போற்றிப் பாடிக்கொண்டிருக்கிறோமே தவிர வேறு எதுவம் செய்ய முனையவில்லை. .
..
சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்கள் இருந்தால் இன்று இந்த சமுதாயத்தை பார்த்து கண்ணீர் வடித்திப்பார்கள். .
..
சுதந்திரம்,ஜனநாயகம் கிடைத்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இதே நிலை நீடிக்க காரணம் சமுதாயம் தான். .
சமுதாயம் என்பது நாம்தான். .மற்றொரு சுதந்திரத்திற்கான
தேடல் வேண்டும். .
போராளிகளை பற்றி பேசியது போதும். .
அவர்களை முன்வடிவாகக் கொண்டு நாமும் அகத்திலும்,புறத்திலும் சுதந்திரம் தேடுவோம். .
..
.
என் ஈழ உறவுகளுக்கு
சுதந்திரக் காற்று சுவாசிக்க கிடைக்கும்
போது இந்த நாளை நான் கொண்டாடிக் கொள்கிறேன். .
அதுவரை இந்தநாள் என்வரையில் நேற்றென நாளை கழியப்போகும் மற்றுமொரு நாளே. .

0 comments:

Ads 468x60px

Social Icons


Animated Social Gadget - Blogger And Wordpress Tips